search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிகி நடனம்"

    நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ வைரலாகி வருகிறது. #kikichallenge #KiKiDance
    சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

    இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

    இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது உதவியாளருடன் டிரேக் என்பவரது மை பீலிங்ஸ் எனும் பாடலுக்கு கிகி நடனம் ஆடியுள்ளார்.

    நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. #kikichallenge #KiKiDance
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியான காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பான முறையில் ஆடிய ‘கிகி’ நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #KiKiChallenge #KajalAggarwal
    ‘கிகி’ நடனம் சவால் வீடியோக்களால் விபத்துக்கள் ஏற்படுவதால், யாரும் ‘கிகி’ நடனம் ஆட வேண்டாம் என்று இந்தியா முழுவதும் போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீறி ‘கிகி’ நடனம் ஆடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

    ஆனாலும் எதிர்ப்பை மீறி பலர் ஓடும் காரில் இருந்து குதித்து, கிகி நடனம் ஆடி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். 

    ரெஜினா கசாண்ட்ரா, இந்தி நடிகைகள் அடாசர்மா, நோரா, நியா, கரிஷ்மா ஆகியோரும் கிகி நடன வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஓடும் காரை தவிர்த்து, பாதுகாப்பாக கிகி நடனம் ஆடும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். காஜல் அகர்வாலும் பெல்லம் கொண்ட சாய் சீனிவாசும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

    படப்பிடிப்பில் இருவரும், நிறுத்தி வைத்திருந்த காரின் முன்னால் சக்கர நாற்காலியில் இருந்து கீழே இறங்கி ‘கிகி டூ யூ லவ் மீ’ பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டு ‘தாமதமாகத்தான் இந்த நடனத்தில் நாங்களும் இணைகிறோம். இப்படியும் பாதுகாப்பாக கிகி நடனம் ஆட முடியும்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார். அவரது பாதுகாப்பான கிகி நடனத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். #KiKiChallenge #KajalAggarwal

    இணையதள விளையாட்டில் ஈடுபட்டு சாலையில் ‘கிகி’ நடனம் ஆடினால் ஜெயிலுக்குள் தள்ளுவோம் என்று பெங்களூரு போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். #KiKi #KiKiDance #KikiChallenge
    பெங்களூரு:

    கனடாவை சேர்ந்த பாடகர் டிரேக் பாடியுள்ள ‘கிகி டூ யூ லவ் மி’ என்ற பாடலுக்கு ஆபத்தான நிலையில் நின்று கொண்டு நடனம் ஆடி இணைய தளத்தில் பதிவு செய்யும் சவால்களை பலர் செய்து வருகின்றனர்.

    இதை ‘கிகி’ நடன சவால் என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் இதே போல் பலர் நடனம் ஆடி இணைய தளத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலும் நடிகைகள், பிரபலங்கள் என பலரும் இவ்வாறு செய்கின்றனர். இது, இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    இதனால் இளம்பெண்கள், இளைஞர்கள் இந்த நடனத்தை ஆடுகின்றனர். குறிப்பாக ஓடும் காரில் இருந்து இறங்கி திடீரென நடனம் ஆடுவது, சாலையின் நடுவில் நின்று நடனம் ஆடுவது என்று ஆபத்தான சாகசங்களை செய்கின்றனர்.

    பெங்களூருவிலும் இது போன்ற நடனங்களில் இளைஞர்கள் அடிக்கடி ஈடுபடுகிறார்கள்.

    எனவே, பெங்களூரு போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதில், “சாலைகளில் நின்று ‘கிகி’ நடனம் ஆடுவதால் உங்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். எனவே, இது சாலை விதிகளுக்கு மாறானது.

    சாலை விதி மீறல் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி, சாலைகளில் அவர்கள் நடனம் ஆடினால் அவர்களை ஜெயிலில் தள்ளுவோம். அவர்கள் ஜெயிலில் சுதந்திரமாக நடனம் ஆட வசதிகளை ஏற்படுத்தி தருவோம்” என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். #KiKi #KiKiDance #KikiChallenge
    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 இளைஞர்கள் ‘கிகி’ நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அவர்கள் காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். #kikichallenge #KiKiDance
    ஐதராபாத்:

    சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

    இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிகி நடனம் சவால் கிராமத்திலும் பிரபலமாகி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 இளைஞர்கள் ‘கிகி’ நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அவர்கள் காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    வயலில் உழவு மாடுகளை கட்டி உழ ஆரம்பிக்கிறார்கள். திடீரென்று இருவரும் மாட்டின் கயிறை விட்டுவிட்டு நடனம் ஆடுகிறார்கள். மாடுகள் தனியாக நடந்து செல்ல இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


    காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தியதால் கிகி நடனத்தை கிண்டல் அடித்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஓடும் காரில் இருந்து திடீரென இறங்குவது ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளனர்.

    இதனால் இருவரும் பாதுகாப்பான ‘கிகி’ நடனத்திற்காக உழவு மாடுகளை பயன்படுத்தி இருப்பார்கள் என்று ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது. #kikichallenge #KiKiDance


    ×